மும்பை நிகழ்ச்சியில் 'மேட்சிங்' ஆடை: அடங்காத விஜய், த்ரிஷா பரபரப்பு

சென்னை: மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில், தனித்தனியாக நீல நிற உடையில், விஜய் – த்ரிஷா பங்கேற்றது, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

த.வெ.க., தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கேட்டு, அவரது மனைவி சங்கீதா வழக்கு தாக்கல் செய்துள்ளார். நடிகை ஒருவருடன் விஜய், திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும், அவர் புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில், விஜயும், நடிகை த்ரிஷாவும் ஒரே நிறத்தில் உடையணிந்து பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், த.வெ.க.,வினர் அதிர்ச்சி அடைந்தனர். சமூக வலைதளங்களில், இது விவாதப் பொருளாக மாறியது.

இந்நிலையில், திரைப்பட இயக்குனர் அட்லி மனைவியின் இரண்டாவது வளைகாப்பு நிகழ்ச்சி, மும்பையில் சமீபத்தில் நடந்தது. அதில் பங்கேற்க, த்ரிஷா மும்பை சென்றிருந்தார். விஜயும் அங்கு சென்றிருந்தார்.

மும்பையில் தான் தங்கியிருந்த ஓட்டலில் நீல நிற உடை அணிந்து எடுத்த போட்டோவை, த்ரிஷா தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். அந்த நிகழ்ச்சியில், அதே நீல நிற உடையில் விஜயும் பங்கேற்றுள்ளாார்.

Source link