மும்பை: வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. வர்த்தகம் துவங்கிய

மும்பை: வாரத்தின் முதல் நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. வர்த்தகம் துவங்கிய முதல் ஓரிரு மணி நேரத்திலேயே, முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு, 14 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் மற்றும் நிப்டி குறியீடுகள் 3 சதவீதம் வரை சரிவை சந்தித்தன.

வர்த்தக முடிவில் சென்செக்ஸ், 1836 புள்ளிகள் சரிந்து, 72,696 என்ற நிலையிலும், நிப்டி 602 புள்ளிகள் சரிந்து, 22,512 என்ற நிலையிலும் நிறைவடைந்தன. போர் ஆரம்பித்த நாளில் இருந்து, வெறும் 24 வர்த்தக நாட்களில், இந்த இரண்டு குறியீடுகளும், 10.50 சதவீதம் சரிவை சந்தித்துள்ளன.

உலகளாவிய எரிசக்தி வினியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால், கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்தது, இந்தியாவின் இறக்குமதி செலவு அதிகரித்து, பணவீக்கத்தை உயர்த்தும் எனும் அச்சம், உலகளாவிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று வெளியேறுவது போன்ற பல்வேறு காரணங்கள், இந்த அதலபாதாள வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.

Source link