ஸ்டட்கர்ட்: ஜெர்மனியில் நடந்த ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் தங்கம் வென்றார் ஹர்ஸ்சித்.
ஜெர்மனியில் ‘டி.டி.பி. போகல் 2026’ ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி நடந்தது. சீனா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் சார்பில் களமிறங்கினர். ஆண்களுக்கான ஜூனியர் பிரிவில் இந்தியாவின் ஹர்ஸ்சித் தாமோதரன், நிஷாத் மிலிந்த் நரவானே பங்கேற்றனர். வால்ட் 1, 2 பிரிவில் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஸ்சித், 13.525 புள்ளிகள் எடுத்து நான்காவது இடம் பிடித்தார்.
அடுத்து நடந்த பைனலில் வால்ட் 1 பிரிவில் ஹர்ஸ்சித், 13.933 புள்ளி எடுத்தார். வால்ட் 2 பிரிவில் 13.400 புள்ளி பெற்றார். ஒட்டுமொத்தமாக 13.666 புள்ளி எடுத்த ஹர்ஸ்சித், முதலிடம் பிடிக்க, தங்கப்பதக்கம் கிடைத்தது. ஹர்கேரியின் ஆரோன் சோல்ட் (13.483), அமெரிக்காவின் வில்லியம் (13.283) அடுத்த இரு இடம் பெற்றனர்.
நிஷாத், ஜூனியர் பொம்மல் ஹார்ஸ் பிரிவில் களமிறங்கினார். இவர், 12.750 புள்ளி எடுத்து, 7வது இடம் பிடித்து, பைனலுக்கு தகுதி பெற்றார்.
