தி.மு.க., ஆட்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், அரசு திட்டங்களுக்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த, தனி அமைப்பு, நில பரிமாற்ற குழு அமைக்கப்படும் என்ற அறிவிப்புகள் உட்பட பல்வேறு அறிவிப்புகளை, கடந்த ஐந்து ஆண்டுகளாக, சட்டசபையில் அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் வெளியிட்டார். அவற்றில், பல்வேறு அறிவிப்புகள் அமலுக்கு வரவில்லை.
அதன் விபரம்:
* அரசின் பல்வேறு பிரிவுகளை ஒருங்கிணைத்து, நில எடுப்புக்கான தனி அமைப்பு ஏற்படுத்தப்படும். நில பரிமாற்ற குழு அமைக்கப்படும்
* நகர்ப்புற பகுதிகளில் நிலங்களுக்கு, டி.எஸ்.எல்.ஆர்., வரைபடங்களை, இணையதளத்தில் பொது மக்கள் பார்வையிட்டு பதிவிறக்கம் செய்யலாம்
* நகர்ப்புறங்களில் நிலங்கள் குறித்த வருவாய் நடவடிக்கை தொடர, புதிய மென்பொருள் உருவாக்கப்படும், நில சீர்திருத்தத் துறையில் மின்னணு அலுவலக முறை அமல்படுத்தப்படும்
* பேரிடர் காலங்களில் தகவல் தொடர்புக்காக, ஒயர்லெஸ் தொடர்புக்கான ரிப்பீட்டர்கள் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்படும். நிலநடுக்க கண்காணிப்பு மையங்கள், 30 லட்சம் ரூபாயில் அமைக்கப்படும்
* உச்சவரம்பு திட்ட நிலங்களை வரன்முறை செய்ய, கால அவகாசம் நீட்டிக்கப்படும்
* சென்னை புறநகரில், மூன்று இடங்களில் நிரந்தர பேரிடர் மீட்பு, நிவாரண மையங்கள், 36 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* பேரிடர்களின்போது அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவிகள், 1,000 இடங்களில், 13.25 கோடி ரூபாயில் அமைக்கப்படும்
* ஜி.பி.எஸ்., எனப்படும் புவி அமைவிட விபரங்களுடன், நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கப்படும்
* சென்னை நிலவரித் திட்ட இயக்குநர் அலுவலகம், 71.90 லட்சம் ரூபாயில் மேம்படுத்தப்படும். பேரிடர் அபாய குறைப்புக்கான கருத்தியல் தளம் ஏற்படுத்தப்படு ம்
* பேரிடர் மேலாண்மை குறித்து, பள்ளி, கல்லுாரி பாடங்களில் சேர்க்கப்படும். எட்டு மாவட்டங்களில் புதிதாக, 25 வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும்.
