நமது நிருபர்கொலம்பியா நாட்டு ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில், வீரர்கள் 34 பேர் உயிரிழந்தனர்.தென்

நமது நிருபர்

கொலம்பியா நாட்டு ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில், வீரர்கள் 34 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் தெற்கு பகுதியில் உள்ள பியூர்டோ லெகுயிசாமோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ராணுவ விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

விமானத்தில் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர். தகவல் அறிந்து விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர். இந்த விபத்தில் 34 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. தீவிர விசாரணை நடந்து வருகிறது. விமானம் விழுந்த இடத்தில் கரும்புகைகள் வெளியேறும் காட்சிகள் இணையத்தில் வெளியானது.

Source link