நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 06) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* புலி படத்துக்கு பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கில், இன்று காலை 10:30 மணிக்கு சென்னை ஐகோர்ட் தீர்ப்பு அளிக்கிறது.
* சென்னை கன்னிமாரா நூலகத்தில் நிறுவப்பட்ட கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
* 3 நாள் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறித்து இன்று ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடுகிறது. ரெப்போ வட்டி விகிதத்தை போதுமான அளவுக்கு குறைத்ததால் மேலும் குறைய வாய்ப்பில்லை என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
* உலகக்கோப்பை (19 வயது) கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இன்று இங்கிலாந்து- இந்திய அணிகள் மோதுகின்றன.
* தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கு இன்று முதல் விருப்ப மனு விநியோகம் தொடங்குகிறது. விருப்ப மமனுக்களை பிப்ரவரி 14ம் தேதி வரை தவெக தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
