நமது நிருபர்
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு திமுக- விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2 பொதுத்தொகுதிகள் உட்பட விடுதலை சிறுத்தைக்கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., கூட்டணியில், நிறைய புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதி பங்கீட்டில் நீண்ட இழுபறி நீடித்தது. கடும் இழுபறிக்கு பின், காங்கிரஸ் கட்சிக்கு, 28 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொமதேகவுக்கு 2 தொகுதிகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மார்க்சிஸ்ட் கட்சிக்கும் நீண்ட இழுப்பறிக்கு பிறகு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று (மார்ச் 24) நடந்த பேச்சுக்கு பிறகு திமுக- விசிக இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. மொத்தம் 8 தொகுதிகள் அந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விசிகவுக்கு 4 தனித்தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் என 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த முறை 6 தனித் தொகுதிகள், 2 பொதுத்தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஓர் அலசல்!
கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு திமுக ஒதுக்கியுள்ள தொகுதிகள், 2021 தேர்தலுடன் ஒப்பிடுகையில் அதிகம், குறைப்பு பற்றிய விவரம்;
* காங்கிரஸ் -28 தொகுதி (3 அதிகம்)
* முஸ்லிம் லீக் -2 தொகுதி (1 குறைப்பு)
* ம.ம.க., -2 தொகுதி (அதே நிலை)
* ம.தி.மு.க., -4 தொகுதி (2 குறைப்பு)
* கொமதேக – 2 தொகுதி (1 குறைப்பு)
* இந்திய கம்யூனிஸ்ட்- 5 தொகுதிகள் (1 குறைப்பு)
* மார்க்சிஸ்ட் – 5 தொகுதிகள் (1 குறைப்பு)
* விடுதலை சிறுத்தைக் கட்சி- 8 தொகுதிகள் (2 அதிகம்)
