8 தொகுதிக்கு சம்மதம் தெரிவித்த திருமாவளவன்- TN Assembly Election Thirumavalavan agrees to 8 constituencies

இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தே.மு.தி.க, மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரட்டை இலக்கில் தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய திருமாவளவனுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணா அறிவாயலத்திற்கு வந்த திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விடுதலை சிறுத்தைக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கையெழுத்து ஆனது.

Source link