தோல்வி பயத்தால் விஜய் மீது விமர்சனம் :கோவையில் செங்கோட்டையன் பேட்டி

கோவை : கோவை விமான நிலையத்தில் த.வெ.க., ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:

விஜய் பற்றி எல்லோரும் கருத்து சொல்வதற்கு காரணம், தோல்வி பயம். இளைஞர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் அனைவரும் தமிழகத்தில் நடக்கும் தேர்தலை எதிர்பார்க்கின்றனர்.

இரண்டு இயக்கங்கள் தான் ஆள வேண்டுமா, புதிதாக மாற்றம் வேண்டும் என மக்கள் முடிவு செய்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் தோல்வி பயம் உருவாகியுள்ளது.

புதிய ஆட்சி வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. விஜய் வெற்றி பெற வேண்டும் என்ற ஒருமித்த கருத்து நிலவுகிறது. மக்கள் சக்தியால் வெற்றி என்பதை யாராலும் தடுக்க இயலாது. 234 தொகுதிகளிலும் அவர் வெற்றி பெறுவார்; முதலமைச்சர் ஆவார்.

தோல்வி பயத்தால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தேர்தல் அறிக்கையை அ.தி.மு.க., வெளியிட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

Source link