“10 தோல்வி பழனிசாமி தேர்தலுக்கு பின் ‘படுதோல்வி’ பழனிசாமி ஆகிவிடுவார்”

நடைபெறவுள்ள தேர்தல் டெல்லி அணிக்கும் தமிழகத்துக்குமான தேர்தல். இதில் தமிழக அணி நிச்சயம் வெற்றி பெறும். கட்சியினுடைய தலைவர்கள் வேறு கட்சி அலுவலகத்திற்கு சென்றால் அது தலைப்புச் செய்தியாக வெளிவரும். ஆனால் கடந்த இரண்டு தினங்களாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, அதிமுக அலுவலகத்திற்கு சென்றார் என்பதே செய்தியாக வருகிறது. அவர் இதுவரை டெல்லியில் உள்ள அமித் ஷா அலுவலகத்திற்கு சென்று வந்தார். அவரது அலுவலகம் சென்னையில் உள்ளதையே மறந்துவிட்டார். இதுதான் இன்றைய அதிமுகவின் நிலைமை.

தேர்தலுக்கு பிறகு பத்து தோல்வி பழனிசாமியை மக்கள் இனி ‘படுதோல்வி’ பழனிச்சாமியாக்கிவிடுவர். அதிமுக கூட்டணிக்கு வாரண்டியும் கிடையாது, கேரண்டியும் கிடையாது. பிஹாரில் வெற்றி பெற்ற நிதிஷ் குமாரை ஓங்கட்டிவிட்டு பாஜக குறுக்கு வழியில் ஆட்சியை பிடித்துவிட்டது. பத்து முறை முதல்வர் ஆன நிதிஷ் குமாருக்கே இந்த நிலை என்றால் ‘பாதம் தாங்கி’ பழனிசாமியின் நிலையை நினைத்து பாருங்கள். மக்களால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டணி திமுக கூட்டணி. பாஜக மட்டுமல்ல அதன் ”பி- டீம்”, ”சி- டீம்” என எத்தனை டீம் வந்தாலும் வெற்றிபெறப்போவது திமுக அணி தான்.

ஒவ்வொரு வாக்காளரையும் இரண்டு முறை இளைஞரணி நிர்வாகிகள் சந்திக்க வேண்டும். முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் ஓட்டு கேளுங்கள். அதன் பிறகு உறவினர்கள், நண்பர்கள் அவர்களின் குடும்பத்தினர். உங்கள் குடும்ப வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வருவதை உறுதிப்படுத்துங்கள். எல்லோரையும் சரிகட்டுவது சற்று சிரமம். ஆனால் அனைத்து முயற்சிகளையும் செய்யுங்கள்.தேர்தலுக்கு இன்னும் 29 நாட்கள் உள்ளது. இளைஞரணி நிர்வாகிகள் அனைவரும் முழு வேலையில் ஈடுபட வேண்டும்” என்று துணை முதல்வர் கூறினார். இக்கூட்டத்தில், எம்எல்ஏ.,க்கள் காந்தி ராஜன், மகாராஜன், சரவணக் குமார், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Source link