மூன்று மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நிறைவு

தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 அன்றும், தமிழ்நாட்டிற்கு வருகின்ற ஏப்ரல் 23 அன்றும் மேற்குவங்கத்திற்கு ஏப்ரல் 23 மற்றும் 29 என இரண்டு தேதிகளில் தேர்தல்கள் நடத்தப்பட இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. 

புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்க இருக்கிறது. எனவே, இந்த மாநிலங்களுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த மார்ச் 16 அன்று தொடங்கியது. இந்த வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்று (23-03-26) மதியம் 3 மணியுடன் நிறைவடைந்தது.  நாளை  (மார்ச் 24) வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்பட உள்ளது. மேலும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெறக் கடைசி நாள் மார்ச் 26 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

இங்கு, புதுச்சேரியைப் பொறுத்தவரை மொத்தமாக 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. அதே போல, கேரளம் 140 தொகுதிகளைக் கொண்டுள்ளது. அசாம் மாநிலம் 126 தொகுதிகளைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்ட உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

Source link