சென்னை: நவீன உலகில் காலையில் கண் விழிப்பதில் இருந்து, இரவு உறங்கும் வரை ஸ்மார்ட்போன் இல்லாமல் ஒரு நொடிகூட நகர மறுக்கிறது வாழ்க்கை. ‘ஸ்மார்ட்’ உலகிற்கு பழகிவிட்டோம் என்று நாம் பெருமைப்பட்டுக் கொண்டாலும், இந்த அதீத போன் பயன்பாடு நமது மூளை செயல்பாட்டையே மெல்ல மெல்ல மாற்றி வருகிறது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
‘அதிகநேரம் போன் பார்ப்பதால் கவனம் சிதறுகிறது, நினைவாற்றல் குறைகிறது, முடிவெடுக்கும் திறன் மங்குகிறது,’ என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இது வெறும் பயமுறுத்தல் அல்ல… உங்கள் மூளைக்குள் நடக்கும் நிஜமான மாற்றம்!
மகிழ்ச்சிப் பூதம்! (Dopamine Impact)
நீங்கள் ஒவ்வொரு முறை போனை ‘அன்லாக்’ செய்யும்போதும், அல்லது சோஷியல் மீடியாவில் ஒரு ‘லைக்’ வரும்போதும், உங்கள் மூளையில் ‘டோபமைன்’ (Dopamine) என்ற ரசாயனம் சுரக்கிறது. இது ஒரு தற்காலிக மகிழ்ச்சியைத் தரும்.
இதனால் என்ன ஆபத்து?
மூளை இந்த தற்காலிக மகிழ்ச்சிக்கு அடிமையாகிறது. அடிக்கடி போன் பார்க்கும் பழக்கம் ‘அடிமைத்தனமாக’ மாறுகிறது. நிஜ வாழ்க்கையை விட டிஜிட்டல் உலகிலேயே வாழத் தோன்றுகிறது.
சிதறும் சிந்தனை! (Attention & Memory)
நமது மூளையின் Prefrontal Cortex என்ற பகுதிதான் கவனம், முடிவெடுத்தல், மற்றும் சுயக்கட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணம். அதீத போன் பயன்பாட்டால் இந்தப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

இதன் விளைவுகள்:
கவனம் சிதறல்: எதிலும் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாது.
ஆழ்ந்த சிந்தனை குறைவு: மேலோட்டமாக மட்டுமே யோசிக்கத் தோன்றும்.நினைவாற்றல் பாதிப்பு: சிறு சிறு விஷயங்களைக்கூட மறந்துவிடுவீர்கள்.
‘ரீல்ஸ்’ vs ‘ஸ்டடிஸ்’ – குழப்பம்!
மூளை எப்போதும் ‘உடனடி மகிழ்ச்சி’யை (இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், சோஷியல் மீடியா) விரும்புகிறது. ‘நீண்டகால இலக்கு’களை (படிப்பு, வேலை, தூக்கம்) தள்ளிப்போடுகிறது. போனை கையில் எடுத்தால் மூளை தவறான தேர்வையே செய்யத் தூண்டுகிறது. ‘இன்னும் 5 நிமிடம்’ என்று ஆரம்பித்து, மணிக்கணக்காக போனைப் பார்ப்பது இதனால்தான்!

புளூ லைட் ஆபத்து மற்றும் தீர்வு!
போன் திரைகளில் இருந்து வரும் Blue Light தூக்கத்தை கெடுப்பது மட்டுமல்லாமல், நினைவக பகுதியான ‘Hippocampus’ மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது பதற்றம் மற்றும் மறதியை அதிகரிக்கிறது.
மீட்கும் மந்திரம்: 4 வார “மூளை ரீசெட்” திட்டம்!
கவலைப்படாதீங்க! இழந்த கவனத்தை மீண்டும் பெற முடியும். அதற்கு இந்தத் திட்டத்தைப் பின்பற்றுங்க:
வாரம் 1-2 (கவனித்தல்): நீங்கள் எப்போது, ஏன் போன் எடுக்கிறீர்கள்? (சலிப்பு / அழுத்தம்) என்பதைக் கவனியுங்கள்.
வாரம் 3-4 (சிறு மாற்றங்கள்):
காலை எழுந்தவுடன் 1 மணி நேரம் போன் ‘நோ’!இரவில் போனை வேறு அறையில் வையுங்கள்.
போன் எடுக்கணும் போல இருந்தால், நடைப்பயிற்சி அல்லது மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
நிபுணர்கள் கூறுவது
டிஜிட்டல் ஹைஜீன்: தேவையில்லாத Notifications-ஐ ஆஃப் (Off) செய்யுங்கள்.
உடற்பயிற்சி: இது மூளைக்குச் செல்லும் ‘natural medicine’.
பஞ்ச்!
“போன் தான் பிரச்னை இல்லை…
அதைப் பயன்படுத்தும் முறை தான் பிரச்னை!”
மூளைக்கு மாறும் தன்மை (Neuroplasticity) உண்டு. சரியான பயிற்சியால் இழந்த கவனம், கட்டுப்பாட்டை மீண்டும் உருவாக்கலாம்.இன்றே கட்டுப்பாட்டை எடுங்க!
