சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால், அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச பிரிட்ஜ் வழங்கப்படும் என அக்கட்சி பொதுச்செயலர் இபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்த இபிஎஸ் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
* ரேசன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் இலவச பிரிட்ஜ்
* முதியோர் உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தப்படும்.
* ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பருப்பு ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் இலவசம்
* அதிமுக தேர்தல் அறிக்கையில் 297 அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
* வங்கிகளில் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்ய நடவடிக்கை
* 5 லட்சம் பெண்கள் டூவிலர் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
பழைய வாக்குறுதிகள்
ஏற்கனவே 3 கட்டங்களாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டு இருந்தார்.
அதில்
* அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.2,000 உதவித்தொகை –
* ஆண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணத் திட்டம் – அதிமுக தேர்தல் வாக்குறுதி
* அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டித் தரப்படும்
* 125 நாட்கள் வேலைத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் –
* அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு 3 இலவச சிலிண்டர்கள் –
* விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை ( ஒரு முறை மட்டும்)
* மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்
* ரேஷன் அட்டைதாரர்களுக்கு வருடந்தோறும் ரூ.1,000 பொங்கல் பரிசுத்தொகை
* கைத்தறி நெசவாளர்களுக்கு 1,400 யூனிட் வரை இலவச மின்சாரம்
*கூட்டுறவு வங்கிகளில் சிறு வியாபாரிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்து இருந்தார்.
