படப்பிடிப்பு நிறைவு; விரைவில் வெளியாகும் “ஜாலியா இருந்த ஒருத்தன்”

“சிவா மனசுல சக்தி” படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் ராஜேஷ். காதலை மையமாகக் கொண்ட இப்படம் நகைச்சுவை மற்றும் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள் மூலமாக அனைத்து தரப்பு மக்களின் கவனத்தையும் பெற்றது. குறிப்பாக, இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இசை மற்றும் பாடல்கள், இன்றளவும் இளைஞர்களால் கொண்டாடப்படும் வகையில் அமைந்துள்ளது. 

இப்படத்தில், ஜீவா, அனுயா, ஊர்வசி மற்றும் சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்த இப்படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் “ஜாலியா இருந்த ஒருத்தன்”. நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இப்படத்தில் இவானா மற்றும் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  

மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதனிடையே, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதாகவும், போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Source link