இந்திய வெளியுறவுக் கொள்கையை அனைவரும் விமர்சிக்கின்றனர்: ராகுல் பேட்டி

புதுடில்லி: ”இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிரதமர் மோடியின் தனிப்பட்ட வெளியுறவு கொள்கையாக மாறியுள்ளது. அனைவரும் இதனை சர்வதேச நகைச்சுவை என விமர்சிக்கின்றனர்,” என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.

டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை பிரதமர் மோடியின் தனிப்பட்ட வெளியுறவு கொள்கையாக மாறியுள்ளது. அனைவரும் இதனை சர்வதேச நகைச்சுவை என விமர்சிக்கின்றனர். பிரதமர் மோடி என்ன செய்வார் செய்ய மாட்டார் என்பது அதிபர் டிரம்ப்புக்கு நன்கு தெரியும். பிரதமர் மோடி சமரசம் செய்து கொண்டால்,நமது வெளியுறவு கொள்கையும் சமரசம் செய்யப்படும். அவர் நேற்று பார்லிமென்டில் பொருத்தமற்ற வகையில் பேசினார்.

பிரதமர் எந்த பொறுப்பிலும் இல்லாதது போல் இருந்தது. இதனால், மக்கள் அவதி அடைந்தனர். எல்பிஜி மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தது சற்று துவக்கம் தான். கோவிட் காலம் போன்ற நிலை உள்ளதாக பிரதம்ர மோடி கூறுகிறார். ஆனால், அக்காலத்தில் எத்தனை பேர் இறந்தனர் மற்றும் என்ன மாதிரியான துயரங்கள் ஏற்பட்டன என்பதை மறந்துவிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Source link