விஜய் சேதுபதி கைவசம் வைத்திருக்கும் படங்களின் அப்டேட்ஸ்! |Updates on the films Vijay Sethupathi has in his hands!

‘பாக்கெட் நாவல்’ தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. சேதுபதிக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவருடைய மிகவும் வித்தியாசமான கேரக்டர் என்று தெரிகிறது.

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்திலும் முக்கிய பங்கு ஏற்றிருக்கிறார் சேதுபதி. வெற்றிமாறனின் வேண்டுகோளுக்கு இணங்கவும் தயாரிப்பாளர் தாணுவின் அன்பிற்காகவும் நடிக்கிற படமாக ‘அரசன்’ அமைகிறது.

Mani Ratnam - Vijay Sethupathi

Mani Ratnam – Vijay Sethupathi

இவற்றின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மணிரத்னம் இயக்கும் படம் ஆரம்பமாகிறது. அதற்கான கதை விவாதங்களில், சற்று ஓய்வாக இருக்கும் போது கலந்து கொள்கிறார் சேதுபதி. இந்தப் படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

‘மகாராஜா 2’ ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டார் டைரக்டர் நித்திலன். சேதுபதிக்கும் அதன் கதை சொல்லப்பட்டு அவர் ஓகே சொல்லிவிட்டார். மணிரத்னம், வெற்றிமாறன் படங்களுக்கு ஈடாக இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இதற்கிடையில் இயக்குநர் மகிழ்திருமேனியும் கதை சொல்லி அதுவும் தயாரிப்புக்கு போகப்போகிறது. மணிரத்னம் படம் முடிந்த பிறகு இவைகளின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

Source link