`அமித் ஷா – எடப்பாடி பழனிசாமி இடையேயான எடுக்கப்பட்ட முடிவு’ – முறையிட்ட அண்ணாமலை தலையிட மறுத்த பியூஷ் கோயல்! | what happened in annamalai piyush goyal meet in chennai

அ.தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டில், பா.ஜ.க-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. “எந்தெந்த தொகுதிகளை அ.தி.மு.க-விடம் கேட்டுப் பெறுவது, அதில் யாரை வேட்பாளராக நிறுத்துவது’ என்ற ஆலோசனை கமலாலயத்தில் சூடு பறக்கிறது.

நேற்று நள்ளிரவு 12.40 மணிவரையில் கமலாலயத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பா.ஜ.க-வின் சீனியர் தலைவர்கள் பலரிடமும் கருத்துக் கேட்டுள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.

இந்தச்சூழலில், இன்று காலை பியூஷ் கோயலைச் சந்தித்திருக்கும் அண்ணாமலை, தன்னுடைய ஆதரவாளர்கள் சிலருக்கு சீட் கேட்டு ஒரு லிஸ்ட்டைக் கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள். சென்னை ஐ.டி.சி சோழா ஹோட்டலில் நடந்திருக்கும் அந்தச் சந்திப்பில், கூட்டணி நிலவரம், தேர்தல் வியூகம் குறித்தெல்லாம் இருவரும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.

பியூஷ் கோயல்

பியூஷ் கோயல்

அந்தச் சந்திப்பு குறித்து நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் மாநில நிர்வாகிகள் சிலர், “மாநிலத் தலைவர் பொறுப்புக்கு அண்ணாமலை வந்தவுடன், ஒவ்வொரு மாவட்டத் தலைவர்களிடமும் பா.ஜ.க-வுக்கு ஆதரவான தொகுதிகளைப் பட்டியல் எடுக்கச் சொன்னார். பட்டியல் எடுக்கப்பட்ட பிறகு, அந்தத் தொகுதிகளைக் குறிவைத்து வேலைப் பார்க்க நிர்வாகிகளையும் களமிறக்கினார்.

அதன்படி, கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக பல நிர்வாகிகளும் அவரவர் தொகுதிகளில் கடுமையாக பணி செய்திருக்கிறார்கள். திருப்பூர் தெற்கு, வாசுதேவநல்லூர், புதுக்கோட்டை, அரவக்குறிச்சி, சூலூர், பல்லடம், பழனி என்று பல தொகுதிகளிலும் பா.ஜ.க-வுக்கென வாக்குவங்கியை உருவாக்கியுள்ளனர். மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை மாற்றப்பட்ட பின்னரும்கூட, அந்தத் தொகுதிகளிலெல்லாம் பா.ஜ.க ஆக்டிவ்வாகவே இருந்து வருகிறது.

Source link