சென்னை: அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் -ஐ தமாகா தலைவர் வாசன் சந்தித்து பேசினார்.
அதிமுக கூட்டணியில் நேற்று பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் இன்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இன்று இரவு சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள வீட்டில் இபிஎஸ்ஐ சந்தித்து பேசினார். அதேநேரத்தில் தமாகா தலைவர் வாசனும் இபிஎஸ் ஐ நேரில் சந்தித்தார். தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது.
