திருடிச் செல்லப்பட்ட நாய்கள்; தப்பித்து 17 கி.மீ. தூரம் வந்து சேர்ந்த ஆச்சரியம்

சீனாவின் ஜீலின் மாகாணத்தில் உள்ள சாங்கன் நகரின் நெடுஞ்சாலையில் ஓடும் லாரியில் இருந்து ஏழு நாய்கள் தப்பித்துச் சென்ற சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. நாய் இறைச்சிக் கடை ஒன்றில் வேலைபார்க்கும் திருடர்கள், இந்த நாய்களைக் கடத்தி சென்றுள்ளனர். அப்போது ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்த இந்த நாய்கள் கூட்டமாகச் சென்றன.  

அவ்வாறு சென்ற நாய்கள் இரண்டு நாட்களில் 17 கிலோ மீட்டர் தொலைவைக் கடந்து தங்கள் உரிமையாளரிடம் சென்று சேர்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காணாமல் போன நாய்கள் திரும்பவும் வந்து சேர்ந்தது, உரிமையாளருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கோர்கி நாய் இவ்வளவு தூரம் உடன் இருந்த நாய்களையும் வழிநடத்தி, உரிமையாளரிடம் கொண்டு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாய்கள் உரிமையாளரிடம் வந்து சேர்ந்த  வீடியோ மற்றும் இந்த நாய்கள் கூட்டமாகப் பாதையில் நடந்து வந்த வீடியோக்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.  மேலும், இந்த நாய்கள் இவ்வளவு தூரம் வழியை மறக்காமல், வந்து சேர்ந்துள்ளது பெரும் ஆச்சரியம் தான் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Source link