இந்த சூழலில் அந்த அணியை ஆதித்யா பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா, பி.எக்ஸ்.பி.இ, போல்ட் வென்ச்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பு ரூ.16,706 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் ஆர்சிபி ஆடவர் அணி மற்றும் மகளிர் அணியின் உரிமையை இந்த கூட்டமைப்பு பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக்கில் நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆர்சிபி அணியை வாங்க பல்வேறு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டிய நிலையில் தற்போது அந்த அணியின் உரிமை கைமாற்றப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்: இதேபோல மற்றொரு ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் கல் சொமானி தலைமையிலான கூட்டமைப்பு சுமார் 15,300 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. கடந்த 2021 முதல் அந்த அணியின் முதலீட்டாளர்களில் ஒருவராக அவர் உள்ளார்.
