சென்னை: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளோம் என தமாகா தலைவர் வாசன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் நேற்று பாஜவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மற்ற கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வந்தது. அக்கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ் இன்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் இன்று இரவு சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள வீட்டில் இபிஎஸ்ஐ சந்தித்து பேசினர். அதேநேரத்தில் தமாகா தலைவர் வாசனும் இபிஎஸ் ஐ நேரில் சந்தித்தார். தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்தது.
இதன் பிறகு வாசன் கூறியதாவது: அதிமுக கூட்டணியில் சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகள் தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரம், ஈரோடு மேற்கு, ராணிப்பேட்டை, கிள்ளியூர், கும்பகோணம் ஆகிய ஐந்து தொகுதிகளில் தமாகா போட்டியிடுகிறது. இந்ததேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறோம்.
முழுமையாக வெற்றி பெறும் நிலையில் கூட்டணி கட்சிகளோடுபணி செய்ய இருக்கிறோம். வெற்றி உறுதி செய்யும். 4 அல்லது ஐந்து நாட்களில் பிரசாரத்தை துவங்குவோம். நாளை மறுநாள் தமாகா தேர்தல் அறிக்கை, வேட்பாளர்கள் பெயரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தாமரை அகில இந்திய சின்னம். சைக்கிள் சின்னத்திற்கு தேர்தல் கமிஷனில் கோட்பாடு இல்லாத காரணத்தினால் தாமரை சின்னத்தை ஏற்றுக் கொள்கிறோம். தமிழகத்தில் இரட்டைஇலை, தாமரை சின்னம் பிரபலமான சின்னங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஜான்பாண்டியன் கட்சி
ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் மன்னேற்ற கழகம் கட்சி ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த சின்னத்தில் போட்டி என விரைவில் முடிவு செய்வோம் என ஜான்பாண்டியன் கூறியுள்ளார்.அதிமுக கூட்டணியில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருமாறன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
