திமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு; இரட்டை இலக்கத்தில் பெற்ற தேமுதிக!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி, திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிக்கு தலா 2 தொகுதிகள், மதிமுகவுக்கு 4 தொகுதிகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதிகள், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள், காங்கிரஸுக்கு 28 தொகுதிகள், விசிகவுக்கு 8 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிக்கு 5 தொகுதிகள் என 56 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 7 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் மற்ற கட்சியினர் போட்டியிடவுள்ளனர். இதுதவிர தேமுதிக, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளுடன் திமுக குழு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக இன்று (24-03-26) மாலை தேமுதிக பொதுச் செயலாலர் பிரேமலதா விஜயகாந்த் திமுகவின் அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார். அதன் பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின் திமுக – தேமுதிக இடையேயான தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டது. அதன்படி திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 10 தொகுதி பங்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஏற்கெனவே ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Source link