“என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம்”

அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைக்கர்’. இதில் ஷர்வானந்த், ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் படம் என படக்குழுவினர் சொல்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும் ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 

இந்நிகழ்வினில் ஷர்வானந்த் பேசியதாவது, “நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சென்னை வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்’ முதல் ‘கணம்’ வரை தமிழ் ரசிகர்களுடன் எனக்கு எப்போதும் ஒரு நெருக்கம் இருந்திருக்கிறது. தமிழ் சினிமாவின் மீதும் தமிழ் மக்களின் மீதும் எனக்கு எப்போதும் தனி அன்பும் மரியாதையும் உண்டு. அதனால்தான் தமிழில் படம் வெளியிடும் ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளையே தேர்வு செய்து வருகிறேன். என் படப் பயணத்தைப் பார்த்தால், ஒவ்வொரு படமும் ஒவ்வொரு புதிய ஜானரில் அமைந்திருப்பதை காணலாம். அதேபோல், ‘பைக்கர்’ படமும் என் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. என் முழு திரை வாழ்க்கையிலேயே இதுதான் எனது சிறந்த படம் என்று பெருமையுடன் சொல்ல முடிகிறது. ஏனெனில், இது இந்திய சினிமாவில் உருவான முதல் மொட்டோகிராஸ் படம்.

இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், மிகப் பெரிய முயற்சியாக உருவாகியுள்ளது. இந்தக் கதாபாத்திரத்திற்காக 22 கிலோ எடையை குறைத்து, 18 வயது இளைஞனாகவும் 30 வயது மனிதராகவும் இரு பரிமாணங்களில் என்னை மாற்றிக் கொண்டேன். இந்தப் படம் என்னை நடிகராக மட்டும் அல்ல, மனிதராகவும் மாற்றிய ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்துள்ளது. ராஜீவன், மதி, யுவராஜ், ஜிப்ரான், ராஜசேகர், மாளவிகா, வம்சி ரெட்டி உள்ளிட்ட அனைவரின் பங்களிப்பும் இந்தப் படத்தை சிறப்பாக மாற்றியுள்ளது. இரண்டு ஆண்டுகளாக நீண்ட அர்ப்பணிப்புடன் உருவான இந்தப் படம் ஏப்ரல் 3ஆம் தேதி வெளியாகிறது; தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்” என்றார். 

Source link