லண்டன்: ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் இருந்து இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் விலகியுள்ளார். அவர் இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட இருந்தார்.
31 வயதான டக்கெட்டை ரூ.2 கோடிக்கு மினி ஏலத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது டெல்லி அணி. இந்நிலையில், அவர் இந்த சீசனில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதோடு டெல்லி அணியிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
