கால் முறிவு செண்டிமெண்ட்; வெற்றி நிச்சயம்

அபிலாஷ் ரெட்டி இயக்கத்தில் யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பைக்கர்’. இதில் ஷர்வானந்த், ராஜசேகர், மாளவிகா நாயர், அதுல் குல்கர்னி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இந்தியாவின் முதல் பைக் ஸ்போர்ட்ஸ் படம் என படக்குழுவினர் சொல்கின்றனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் உட்பட பல மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வரும் ஏப்ரல் 3 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையில் படக்குழுவினர் சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 

இந்நிகழ்வினில் ராஜசேகர் பேசியதாவது, “நடக்கும்போதே கொஞ்சம் சிரமமாக இருக்கிறது; ஹீரோ ஷர்வானந்த் கையைத் தந்து என்னை மேடைக்கு அழைத்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்கு காலில் முறிவு ஏற்பட்டது. இப்போதுதான் அது குணமாகி வருகிறது. இதற்கு முன்பும் சினிமா ஸ்டண்ட் செய்யும் போது இரு கால்களும் முறிந்த அனுபவம் எனக்கு உள்ளது. அதில் இடது கால் முதலில் முறிந்தது, அதுவும் ஒரு படப்பிடிப்பின் நடுவிலேயே நடந்தது. அந்த விபத்து மிகவும் பெரியதாக இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றேன். 

அப்போது டாக்டர்கள் ஓய்வெடுக்கச் சொன்னாலும், ‘இதுதாண்டா போலீஸ்’ படத்தின் வெளியீடு நெருங்கியதால் மருத்துவமனையில் அமைதியாக இருக்க முடியவில்லை. டிசம்பர் 8ஆம் தேதி வெளியான அந்தப் படத்தைப் பார்க்க நேராக சத்யம் திரையரங்கிற்கே வந்தேன். அந்தப் படம் வெளியாகும் முன்பே தெலுங்கில் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அப்போது இந்த முறிவு நல்ல அறிகுறி, படம் பெரிய ஹிட் ஆகும் என்று பலர் சொன்னது நினைவுக்கு வந்தது. அதேபோல் இப்போதும் மீண்டும் முறிவுடன் சத்யம் திரையரங்கிற்கு வந்திருக்கிறேன் என்பதால், இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஏப்ரல் 3ஆம் தேதி படம் வெளியாகிறது.  அனைவரும் திரையரங்கில் வந்து ஆதரிக்க வேண்டும்.  இந்தப் படம் ரசிகர்களின் அன்பில் பெரிய வெற்றியை அடையும் என்று மனமார நம்புகிறேன்” என்றார். 

Source link