விபத்தில் பள்ளி சிறுமி உயிரிழப்பு; 5 மணி நேரத்துக்கு மேலாக நீடிக்கும் சாலை மறியல்!

சங்கரன்கோவில் அருகே 4 வயது பள்ளி மாணவி கார் மோதி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தனியார் மருத்துவமனை முகப்பு கண்ணாடிகள் ஆத்திரத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. இதனால், பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி செயல்பட்டு வருகிறது. நெற்கட்டும்செவல் கிராமப் பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி வேல்மயில் தம்பதியினரின் ஒரே மகள் சிவ யாழினி நான்கு வயது பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு சிறுமி வெளியே வந்த நிலையில் இன்று மாலை சுமார் நான்கு மணி அளவில் பள்ளி வளாகத்தில் கார் பின்புறமாக வந்த போது குழந்தை மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பாளை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம், குழந்தையின் இறப்பை உடனடியாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்காததாக கூறி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி குழந்தையின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் செங்கோட்டை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி. மாதவன் சாலை மாறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். மேலும் போலீசார் சி.சி.டி.வி. ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் பள்ளி அருகிலேயே உள்ள அதே நிர்வாகத்தை சேர்ந்த தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் ஆத்திரத்தில் மருத்துவமனை முகப்பின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளார்கள். தனியார் பள்ளிக்கு மருத்துவமனைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மீண்டும் மறியலில் ஈடுபட்டு ஆறு மணி நேரம் தொடர்ந்து மறியல் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து அனைத்தையும் 30 கிலோமீட்டர் சுற்றி மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்த ப்பகுதிக்குள் போலீசார்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Source link