தனியார் துறை வளர்ச்சி 3 ஆண்டுகளில் இல்லாத சரிவு

பெங்களூரு: இந்திய தனியார் துறை நிறுவனங்களின் வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இம்மாதம் மந்தமடைந்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பிளாஷ் பி.எம்.ஐ., குறியீட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:

கடந்த மாதம் 58.90 புள்ளிகளாக இருந்த பிளாஷ் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 56.50 புள்ளிகளாக சரிந்துள்ளது. மேற்காசிய போர் சூழலால் ஏற்பட்டுள்ள நிலையற்ற தன்மையால், தயாரிப்பு துறை பி.எம்.ஐ., குறியீடு 56.90 புள்ளிகளில் இருந்து 53.80 புள்ளிகளாக கணிசமாக குறைந்துள்ளது. சேவை துறை பி.எம்.ஐ., குறியீடு 58.10 புள்ளிகளிலிருந்து 57.20 புள்ளிகளாக குறைந்துள்ளது.

கச்சா எண்ணெய், எரிசக்தி, உணவு, உலோகம் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றின் விலை, கடந்த 2022 ஜூன் மாதத்துக்கு பின், மிக வேகமாக உயர்ந்துள்ளது.

உள்நாட்டு தேவை மந்தமடைந்திருந்தாலும், ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கும் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link