பாட்மின்டன் 'ரேங்க்': தான்வி சர்மா அசத்தல்

புதுடில்லி: சர்வதேச பாட்மின்டன் தரவரிசையில் இந்தியாவின் தான்வி சர்மா, முதன் முறையாக 34வது இடம் பிடித்தார்.

உலக பாட்மின்டன் கூட்டமைப்பு (பி.டபிள்யு.எப்.,) சார்பில், பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை சிந்து, 13வது இடம் பெற்றார். போலந்து தொடரில் கோப்பை வென்ற உன்னதி ஹூடா, 27வது இடத்தில் உள்ளார்.

பிரான்சின் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தான்வி சர்மா 17, உலகத் தரவரிசையில் முதன் முறையாக, 34வது இடம் பிடித்தார். சிந்து, உன்னதி ஹூடாவுக்கு அடுத்து சிறந்த தரவரிசை பெற்ற இந்திய வீராங்கனை ஆனார் தான்வி. இஷாராணி 40வது இடத்திற்கு முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 12 வது இடம் பிடித்துள்ளார் இந்தியாவின் லக்சயா சென். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 4வது இடத்தில் தொடர்கிறது.

Source link