தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே பள்ளிக்குள் வந்த கார் மோதியதில் யு.கே.ஜி., மாணவி உயிரிழந்தார்.

தென்காசி: தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே பள்ளிக்குள் வந்த கார் மோதியதில் யு.கே.ஜி., மாணவி உயிரிழந்தார். பெற்றோர், உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

புளியங்குடி அருகே சிந்தாமணி தனியார் பள்ளியில் நெற்கட்டும்செவலைச் சேர்ந்த மாரிச்சாமி-வேல்மயில் தம்பதியின் மகள் இசையாழினி 4, யு.கே.ஜி., படித்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பள்ளி வளாகத்தில் நின்றிருந்தார். அப்போது பள்ளி வளாகத்திற்குள் வந்த கார், அவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த இசையாழினி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனிடையே மகள் வீடு திரும்பாததால் பள்ளியில் விசாரித்த பெற்றோர், விபத்து செய்தி அறிந்து அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சிந்தாமணி அருகே மறியலில் ஈடுபட்டனர். கார் டிரைவரை கைது செய்யக்கோரி முழக்கமிட்டனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரும்வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Source link