புதுச்சேரியில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 9 அன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  இதனிடையே, இழுபறியில் இருந்து வந்த காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான கூட்டணி  பேச்சுவார்த்தை முடிவிற்கு வந்துள்ளது. இதனால், கூட்டணியின் தொகுதிப் பங்கீடு சுமுகமான முறையில் அமைந்தது. இந்த கூட்டணியைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் திமுக 14 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. 

கூட்டணியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 14 தொகுதிகளில் “உழவர்கரை” தொகுதியை  விசிகவிற்கு திமுக வழங்கியுள்ளது. இதனால், திமுக 13 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது . அதன்படி, வில்லியனூர் தொகுதியில் சிவா, மங்கலம் தொகுதியில் எஸ்.எஸ்.ரங்கன், திருபுவனை தொகுதியில் அங்காலன் போட்டியிட உள்ளனர். 

அதேபோல, பாகூர் தொகுதியில் ஆர்.ஆர்.செந்தில்குமார், முதலியார்பேட்டை தொகுதியில் சம்பத், உப்பளம் தொகுதியில் அனிபால்கென்னடி, உருளையன்பேட்டை தொகுதியில் எஸ்.கோபால், நெல்லித்தோப்பு தொகுதியில் கார்த்திகேயன், ராஜ்பவன் தொகுதியில் விக்னேஷ், காலப்பட்டு ஏ.செந்தில் (எ) ரமேஷ், கதிர்காமல் தொகுதியில் வடிவேலு, காரைக்கால் தெற்கு தொகுதியில் ஏ.எ.எச்.நாஜிம், நிரவி டி.ஆர்.பட்டிளம் தொகுதியில் நாகதியாகராஜன் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

விசிக தரப்பில் இருந்து, தங்களுக்கும் தொகுதிகளை ஒதுக்கக் காங்கிரஸ் கட்சியிடம் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இருந்த போதிலும் காங்கிரஸ் விசிக விற்கு இடம் ஒதுக்கீடு செய்யாத நிலையில், திமுக ஒரு தொகுதியை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.  

Source link