சென்னை:
தமிழகத்தில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலின்போது ஒவ்வொரு கட்சியும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளது. அந்தந்த கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் யார் யார்? என்பதை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்கும்படி தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏனென்றால், அறிவிக்கப்பட்ட நட்சத்திர பேச்சாளருக்கான போக்குவரத்து உள்ளிட்ட தேர்தல் பிரசார செலவுகள், அவர் எந்த வேட்பாளருக்காக பிரசாரம் செய்கிறாரோ, அவரது தேர்தல் செலவுக் கணக்கில் சேராது.
