சென்னை: வரும் சட்டசபை தேர்தலுக்கான 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. எடப்பாடி தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று விட்டது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து, அதிமுக சுமார் 165 இடங்களில் போட்டியிட இருக்கிறது. தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்ட அதிமுக, இன்று 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
எடப்பாடி தொகுதியில் இபிஎஸூம், தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணியும், விராலிமலையில் சி.விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர். கடந்த தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட தோல்வியைத் தழுவிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த முறை மைலம் தொகுதியில் போட்டியிடுகிறார். மற்ற 22 வேட்பாளர்களும், கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட அதே தொகுதியில் களமிறங்கியுள்ளனர்.
வேட்பாளர்களின் முழு விபரம்
எடப்பாடி – இபிஎஸ்
வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி
திண்டுக்கல் – சீனிவாசன்
நத்தம் – விஸ்வநாதன்
தொண்டாமுத்தூர் – எஸ்.பி.வேலுமணி
குமாரபாளையம் – தங்கமணி
ராயபுரம் – ஜெயக்குமார்
மயிலம் – சி.வி.சண்முகம்
மதுரை மேற்கு -செல்லூர் ராஜூ
பாலக்கோடு – கே.பி.அன்பழகன்
நன்னிலம் – காமராஜ்
வேதாரண்யம் – ஓ.எஸ்.மணியன்
விராலிமலை – சி.விஜயபாஸ்கர்
கோவில்பட்டி – கடம்பூர் ராஜூ
திருமங்கலம் – ஆர்.பி.உதயகுமார்
சிவகாசி – ராஜேந்திரபாலாஜி
மதுரவாயல் – பென்ஜமின்
கலசபாக்கம் – அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி
திருப்பரங்குன்றம் – ராஜன் செல்லப்பா
பவானி – கருப்பணன்
ஜோலார்பேட்டை – கே.சி. வீரமணி
கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அரியலூர்- தாமரை எஸ்.ராஜேந்திரன்
