தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி அதில் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய 23 பேர் கொண்ட முதற்பட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது. அதில், எடப்பாடி தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆகியோர் தொகுதி மாறி போட்டியிடவுள்ளனர்.
