வீராணம் ஏரி கரையில் மரத்தில் டைல்ஸ் ஏற்றிச்சென்ற லாரி மோதி விபத்து ஓட்டுநர் படுகாயம்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் இருந்து இன்று (23-03-26) மாலை வீராணம் ஏரிக்கரை வழியாக டைல்ஸ் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சேத்தியாதோப்பு நோக்கி சென்றது. அப்போது ஏரிக்கரை சாலையில் உள்ள கந்தகுமாரன் இரட்டை வாய்க்கால் மதகு அருகே சென்றபோது லாரியானது கட்டுப்பாட்டை இழந்து ஏரியின் வலது பக்கம் உள்ள புளிய மரத்தில் மோதியது.=
இதில் லாரியின் முன் பக்கம் சேதமானது. இதில் ஓட்டுநருக்கு தலை மற்றும் இரண்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் ஓட்டுநரை மீட்டு 108 அவசர ஊர்தி மூலம் சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
