ஈரான் – இஸ்ரேல், அமெரிக்க போர் இன்று 24வது நாளை எட்டியள்ளது. உலகின் எண்ணெய், எரிவாயு வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளதால் இந்த போர் உலகளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனால் இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டைக் கட்டுப்படுத்தவும், விநியோகத்தைச் சீர்செய்யவும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான சிலிண்டர்களை முன்பதிவு செய்வதில் புதிய கட்டுப்பாட்டை மத்திய அரசு அமல்படுத்தியது.
அதாவது நகர்ப்புறங்களில் ஒரு சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்ட பிறகு, அடுத்த சிலிண்டரை முன்பதிவு செய்ய குறைந்தபட்சம் 25 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். (முன்பு இது 15 முதல் 21 நாட்களாக இருந்தது).
