ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அருகே ஏரியில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ராணிப்பேட்டையில் உள்ள மணியம்பட்டு ஏரியில் பார்த்திபன்,13, நிதிஷ்,13, நித்திஷ்,14, ஆகிய 3 சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். ஏரியின் ஆழம் தெரியாமல் மூவரும் தண்ணீரில் குளித்துக் கொண்டிருந்த போது, சிறுவன் ஒருவன் நீரின் ஆழமான பகுதியில் சிக்கிக் கொண்டான். இதைக் கண்ட மற்ற இருவரும் அந்த சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளனர்.

இதில், மூவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவர்கள் உயிரிழந்த செய்தியைக் கேட்டு உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அங்கு குவிந்தனர். சிறுவர்களின் பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சிகள் பார்ப்போரை உருகச் செய்தது.

Source link