திருவனந்தபுரம்: தனது தாயார் சோனியா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால், கேரள சுற்றுப்பயணத்தை ராகுல் ரத்து செய்தார்.
கேரள சட்டசபை தேர்தலையொட்டி, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய இடங்களில் காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் இன்று பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். கோழிக்கோடு பகுதியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் மாலை 4.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இந்த சூழலில் ராகுல் வரவேற்க கேரளா காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் திடீரென சுற்றுப்பயணத்தை ராகுல் ரத்து செய்துள்ளார். தனது தாயார் சோனியா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளதால், ராகுலின் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
வழக்காமான பரிசோதனைக்காக டில்லி கங்கா மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப் பட்டு உள்ளார். தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்தனர். தற்போது, கோழிக்கோடு பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத்தில் ராகுலுக்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உரையாற்றுவார் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
