ராங்கால்! பெங்களூருக்கு மாறிய ஜக்கி ஓட்டு!

“ஹலோ தலைவரே,… தி.மு.க. கூட்டணியில் சி.பி.எம்., வி.சி.க., தே.மு.தி.க. கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீடு செய்வது மட்டுமே பாக்கி. அதன்பிறகு தொகுதிகளை இறுதிசெய்வது ஓரிரு நாட்களில் முடிஞ்சிரும் போலிருக்கே.””

“அப்படியா சொல்ற, அடம்பிடிக்கிறவங் களையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் சமாதானப்படுத்திட முடியுமா?””

“தி.மு.க.வின் வேட்பாளர்கள் பட்டியலை 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ஸ்டாலின் திட்டமிட்டி ருக்கிறார். நேர்காணல் முடி யும்போதே கூட்டணிக் கட்சி களுக்கான தொகுதிகளையும் அறிவித்துவிடவேண்டு மெனத் திட்டமிட்டி ருந்தார் ஸ்டாலின். ஆனால், முடிய வில்லை. புதிதாக கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வுக்கு தங்களைவிட அதிக சீட்டுகளை கொடுப்பதற்காக, தங்களது எண் ணிக்கையைக் குறைத்துக்கொள்ள தி.மு.க. வலியுறுத்தியதில் வி.சி.க., சி.பி.எம். கட்சிகளுக்கு ஏற்பட்ட ஆதங்கத்தால்தான் அவர்களுக்கான எண்ணிக்கையை முடிவுசெய்வதிலும், தொகுதிகளை அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டது.  சி.பி.எம். மாநிலச் செயலாளர் சண்முகம், வி.சி.க. தலைவர் திருமா ஆகி யோரை நேரில் அழைத்து சூழல்களை விவரித்துப் பேசி யிருக்கிறார் ஸ்டாலின். அனேகமாக 24-ஆம் தேதிக்குள் இந்த பிரச் சனைக்கு தீர்வு காணப்பட்டுவிடும்.”” 

“”சேப்பாக்கம்- திரு வல்லிக்கேணி தொகுதிக்கு சீட் கேட்டிருந்த உதயநிதி ஸ்டாலின் நேர்காணலில் கலந்துக்கிட்டிருக்காரே?”” 

“இந்த தொகுதிக்கு உதயநிதி மட்டுமே சீட் கேட்டிருந்ததால் அவர் மட்டும் நேர்காணலில் கலந்துக்கிட் டாரு. உதயநிதியிடம், தொகுதியில் உங்களுக்கு செல்வாக்கு எப்படி? அஞ்சு வருசத்தில் தொகுதிக்கு என்ன செஞ்சிருக்கீங்க? எஸ்.ஐ.ஆர். பணிகளை கவனிக்கச் சொல்லியிருந்தோமே, அதைக் கவனிச்சீங்களா? எந்தளவுக்கு முடிச்சிருக்கீங்க? பார்லிமெண்ட் தேர்தலில் உங்க தொகுதியில தி.மு.க. வாங்கிய ஓட்டுகள் எவ்வளவு? என்றெல்லாம் ஸ்டாலின் கேட்ட கேள்விகளுக்கு டான் டான்னு பதில் சொல்லியிருக்கிறாரு உதயநிதி.”” 

“காங்கிரஸுக்கு கொடுக்கப் பட்டுள்ள 28 தொகுதிகளுக்கு ஏக அடிதடி நடக்குதாமே?”” 

“ஆமாங்க தலைவரே..… காங் கிரசுக்கு இப்போ 17 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. இவங்க 17 பேர் மீதும் நல்ல ரிசல்ட் இல்லைன்னு முதல்வ ருக்கு ரிப்போர்ட் போயிருக்கு. 200 சீட்டுகளில் வெல்லவேண்டு மென மிகக்கவனமாக காய்களை நகர்த்திவரும் ஸ்டாலின், காங்கிரசில் சிட்டிங் எம்.எல்.ஏ.க் களுக்கு சீட் கொடுக்கப் பட்டால் தி.மு.க.வின் 200 இடங்களில் வெற்றி என்கிற இலக்கில் தோல்வி வரும்னு நினைக்கிறார். அதனால, காங்கிரசின் சிட்டிங் தொகுதிகள் சிலவற்றை தி.மு.க. எடுத்துக்கொண்டு அதுக்குத் தோதாக மாத்திக்கொடுக்க முடிவுசெய்திருக்கிறாரு. இது இப்படியிருக்க, 28 தொகுதிகளில் பெரும் பாலான தொகுதிகள் கோடிக்கணக்கில் விலை பேசப்படுகின்றன. இதுகுறித்த புகார்கள் ராகுல்காந்திக்கு பறந்திருக்கிறது.”” 

“ஜக்கி வாசுதேவ் தன்னோட வாக்கை பெங்களூருவுக்கு மாத்துறார் போலிருக்கே?””

“சில வருடங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலுள்ள சிக்கபல்லாபூர் அருகே அவலகுர்கி கிராமத்தில் ஈஷா மையத்தைக் கட்ட துவங்கினார் ஜக்கி வாசுதேவ். கோவையிலுள்ள ஈஷா மையம்போல் அச்சு அசலாக கட்டப் பட்ட அவலகுர்கி  ஈஷா மையத்தின் கட்டடப் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தது. உள்ளூர் மக்களின் எதிர்ப்பு, பாலியல் குற்றச்சாட்டுக்கள் இவற்றால் ஒருகட்டத்தில் பெங்களூரு ஈஷா மையத்திற்கு இடமாற்றலாகிவிடுவார் ஜக்கி வாசுதேவ் என பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில், கோவை மாவட்டம்  முள்ளாங்காடு வாக்குச்சாவடியில் இடம்பெற்றிருந்த ஜக்கி வாசுதேவின் வாக்கு நீக்கப்பட்டு, தற்பொழுது கர்நாடக மாநிலம் பெங்களுரூவுக்கு  மாற்றப் பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.””       

“என்னப்பா செந்தில்பாலாஜியைக் குறிவைத்து பா.ஜ.க. பாய்ந்திருக்கிறது போல?””

“ஆமாம் தலைவரே, அ.தி.மு.க. கூட்டணி மூலம் ஆட்சியைக் கைப்பற்றி, தமிழ்நாட்டை ஆளலாமென்ற எண்ணத்திலிருந்த பா.ஜ.க.வுக்கு இடியாய் இறங்கியுள்ளது  ‘மீண்டும் தி.மு.க.வே ஆட்சியமைக்கும்’ என்ற தனியார் சர்வேக்களும், மத்திய அரசின் உளவுத்துறை குறிப்புக்களும். இதனால் தி.மு.க. தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றும் சிலரை வழக்குகள் மூலம் முடக்கினால் நினைத்ததை சாதித்துவிடலாம் என்ற எண்ணத்தில் சில ஏஜென்சிகளைக் களமிறக்கியுள்ளது பா.ஜ.க. நிர்மலா சீதாராமனின் மேற்பார்வையில் வேதா என்பவருக்குச் சொந்தமான ஙண்ஸ்ரீழ்ர் நற்ஹற் எனும் நிறுவனத்தினை ஆயுதமாக்கி செந்தில் பாலாஜிக்கு எதிராகக் களமிறக்கியுள்ளது பா.ஜ.க. இதில், “2021-2022ஆம் ஆண்டு களில் டாஸ்மாக்கில் பெருமளவு ஊழல் நடந்துள்ளது. அதாவது, பட்ஜெட்டின் போது தாக்கல் செய்யப்படும் பாலிசி நோட்டிற்கும், இயக்குநர்களின் இறுதி அறிக்கைக்கும் ஒற்றுமையில்லாமல் உள்ளது. இதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது’ என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கினைத் தொடுத் துள்ளது வேதா டீம். இது வருகின்ற ஏப்ரல் 3-ஆம் தேதி விசாரணைக்கு வரும் பட்சத்தில் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பாயலாம்.”’

“”தேர்தல் எதிரொலியாக பல மாவட் டங்களில் சுடச்சுட அதிகாரிகள் மாற்றம் நடக்கத் தொடங்கியிருக்குபோல?”

“”ஆமாங்க தலைவரே, தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் இந்த சமயத்தில் தேர்தல் ஆணை யம் பரவலாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் பணியாற்றக்கூடிய அதி காரிகளை தற்காலிகமாக பணியிடமாற்றம் செய்வது வழக்கமான ஒன்றுதான். இருந் தாலும், தமிழகம் முழுவதும் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படாமல் குறிப்பிட்ட சில மாவட்டங்களை மட்டும் குறிவைத்து தேர்தல் ஆணையம் மாற்றம் செய்துள்ளது. கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பணியாற்றிய ஐ.பி.எஸ். அதிகாரிகள் நான்கு பேரை பணியிடமாற்றம் செய்துள்ளனர். அதில் கரூர் மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய ஜோஸ்தங்கையா கரூரில் த.வெ.க. கூட்டம் நடைபெற்றபோது அங்கு அவர் இருந்ததால் அவரை பணி யிடமாற்றம் செய்யவேண்டும் என இ.பி.எஸ். கேட்டிருந்தார். மேலும் எம்.ஆர்.விஜய பாஸ்கருக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற காரணத்திற்காகவும், இ.பி.எஸ்., அண்ணாமலை ஆகியோரின் அழுத்தம் காரணமாகவும் இவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். விருதுநகர் மாவட்ட எஸ்.பி. ஆகப் பணியாற்றிய கண்ணன், ராஜேஷ்தாஸ் வழக்கில் தொடர்புடையவர் என்பதால் இவரை பணியிடமாற்றம் செய்துள்ளனர். ஈரோடு மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய சுஜாதா, நாகை மாவட்ட எஸ்.பி.யாக  பணியாற்றிய பாலகிருஷ்         ணன் ஆகிய இருவரும் நேர்மையான அதி காரிகளாக இருந்தும் அவர்களையும் தேர்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய் துள்ளது. இந்த பணியிட மாற் றம், தற்போது அதிகாரிகள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.”

“கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு, எந்தத் தொகுதி என்ற விவரமே முடிவாகாத நிலையில் லால்குடி தொகுதியில் லீமாரோஸ் அ.தி.மு.க. சார்பில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி யிருக்கிறாரே?””

“ஆமாம் தலைவரே, பிரியா புரமோட் டர்ஸுக்குச் சொந்தமான இடத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்து முக்கியஸ்தர்களை நேரில் அழைத்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்திவருகிறார் லீமாரோஸ். லால்குடி பகுதியில் தனியார் மண்டபமொன்றை இரண்டு மாத வாடகைக்கு ஒப்பந்தம் போட்டுள்ளார். கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படாம
லிருக்கும் நிலையில் எப்படி இவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார் என்று கட்சியில் பலரும் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். எடப்பாடிக்கு, தான் 300 கோடி ரூபாய் நிதி கொடுத்ததால் தன்னை வேட்பாளராக நியமித்துள்ளதாக, தனக்கு நெருக்கமான வர்களிடம் குறிப்பிட்டுள்ளார் லீமாரோஸ். எல்லாம் லாட்டரி பணம் குமிஞ்சு கிடக்குது. மார்ட்டின் பொண்டாட்டி, மகன், மருமகன்னு ஒருவழியா நாட்ட குட்டிச்சுவர் ஆக்க திட்டம் போட்டுட்டாங்க. இதனால் கடுப்படைந் திருக்கும் அ.தி.மு.க. நிர்வாகிகள், பல ஆண்டுகளாக இத்தொகுதியில் கட்சிக்காக உழைத்த தங்களுக்கு எந்த ஒரு முன்னுரிமையும் வழங்கப்படாமல் நிதி மட்டும் கொடுத்த காரணத்திற்காக சீட்டு கொடுப்பது மிகுந்த வேதனைக்குரியதாக உள்ளது என முணு முணுக்க ஆரம்பித்துள்ளனர்.”’

“சரிப்பா, நானும் ஒரு விஷயம் சொல்றேன். கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக எடப்பாடியும், தினகரனும் டெல்லி போன போது அங்கே அன்புமணியும் அழைக்கப் பட்டார் என தகவல் பரவியது. ஆனால் அது உண்மையில்லை. மாநிலங்களவை உறுப் பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அன்புமணி. அவருக்கு ஒரு வீடு தேவை. ஆத லால், தற்போது காலியாகும் எம்.பி.க்களின் வீடுகளில் ஒன்றைப் பிடிக்கத்தான் அவர் டெல்லி சென்றிருந்தாராம்.”

______________
இறுதிச் சுற்று! 

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி பங்கீடு!

அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக் கட்சி களின் இறுதிக்கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, 23ஆம் தேதி திங்களன்று வழக்கத்துக்கு மாறாக, சென்னை இராயப் பேட்டையிலுள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டணியிலுள்ள அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி.தினகரன் 9 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாள ரான பியூஷ் கோயல் முன்னிலையில் எடப்பாடி பழனிச்சாமி, தொகுதிப் பங்கீடு விவரத்தை வெளியிட்டார். அதன்படி பா.ஜ.க.வுக்கு 27, அ.ம.மு.க.வுக்கு 11, அன்புமணி பா.ம.க.வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியி லுள்ள சிறு, சிறு கட்சிகளுக்கு தலா 2 சீட் என ஒதுக்கவுள்ளனர். ஜி.கே.வாசனின் த.மா.கா.வுக்கு 3 சீட்கள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில் என்.டி.ஏ. கூட்டணி  கூட்டத்தில் ஜி.கே.வாசன் கலந்துகொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.                  

-கீரன்

Source link