நக்சல் மூத்த தலைவன் பாபா ராவ் உட்பட நக்சலைட்டுகள் 17 பேர் சரண்

நமது நிருபர்

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நக்சல் மூத்த தலைவன் பாபா ராவ் உட்பட நக்சலைட்டுகள் 17 பேர் சரண் அடைந்தனர்.

இந்தியாவில் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்த நக்சல்களை, மத்திய – மாநில அரசுகள் வேரோடு அழித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, நக்சல் அமைப்புக்கு எதிராக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 31க்குள், நாட்டிலிருந்து நக்சல்களை முற்றிலும் ஒழிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. நக்சல் அமைப்புக்கு எதிராக நம் பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

நக்சல் சித்தாந்தத்தை கைவிட்டு திருந்தி வாழ நினைக்கும் நக்சல் அமைப்பினருக்கு மத்திய – மாநில அரசுகள் உதவித்தொகை அளித்து மறுவாழ்வும் அளிக்கின்றன. இதனை ஏற்றுக்கொண்டு ஏராளமான நக்சலைட்டுகள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரண் அடைந்துள்ளனர். இந்நிலையில் சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நக்சல் மூத்த தலைவன் பாபா ராவ் உட்பட நக்சலைட்டுகள் 17 பேர் சரண் அடைந்தனர். இதில் பெண்கள் 8 பேர் அடங்குவர்.

சரண் அடைந்த நக்சலைட்டுகள் ஏகே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை ஒப்படைத்தனர். நக்சல் மூத்த தலைவன் பாபா ராவ் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.25 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது. இவன் மீது 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு பாபா ராவ் சரண் அடைந்தது நக்சல் ஒழிப்பு நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

ஆட்சி அமைப்போம்

நிருபர்களிடம் இபிஎஸ் கூறியதாவது: விரைவில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் விபரம் அறிவிக்கப்படும். எங்கள் கூட்டணியை பொறுத்தவரை அனைவரும் சமம், எல்லா கட்சிகளுக்கும் பலம் இருக்கிறது. ஒவ்வொரு கட்சியும் சேர்த்தால் தான் வெற்றி பெற முடியும். சிறுதுளியும் பெரு வெள்ளம். 234 தொகுதிகளிலும் எங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். அதிமுக ஆட்சி அமைக்கும்.
எங்களது கூட்டணியில் இருப்பவர்கள் போட்டியிடும் சின்னங்கள் அவர்களது விருப்பம். ஜனநாயக முறைப்படி எங்கள் கட்சி செயல்படுகிறது. பிரதான கட்சி அதிமுக. எங்களது கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு அதிக ஓட்டு வங்கி உள்ளது. மக்கள் திமுகவை அகற்ற வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். மக்கள் கொதித்து போய் இருக்கிறார்கள். மக்களுக்காக அதிமுக போராடி வருகிறது. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

Source link