அத்துமீறி வீட்டில் நுழைந்து ஒரு லட்சம் கேட்டு பெண்ணை மிரட்டிய சாமியார்கள்

தெலுங்கானா மாநிலம் உய்ப்பூர் அருகேயுள்ள ஆகனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாத் ராவ் (60). அவரது மனைவி மணி (55) என்பவர் வீட்டில் தனியாக இருந்த சமயத்தில், காவி நிற உடையணிந்து வந்த நான்கு சாமியார்கள் மந்திரங்களை முனகியபடி, பிரசாத் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது, மணியிடம் தங்களுக்கு ஆசிரமம் இருப்பதாகவும், ஆசிரம பராமரிப்பு செலவிற்காக ஒரு லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும் வற்புறுத்தியுள்ளனர்.  

மணி தன்னிடம் அவ்வளவு தொகை இல்லை என்று கூறி பணம் தர மறுத்துள்ளார். “பணம் தராவிட்டால் சாபம் விட்டு உங்களை நாசமாக்கி விடுவோம்” என்று அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணி, வீட்டில் தான் வைத்திருந்த ரூ.5000 பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். இது போதாதென்று,  வீட்டிற்கு வந்த மணியின் மருமகனிடம் இருந்தும் அந்த சாமியார்கள் ரூ.1000 பணத்தைப் பறித்துக் கொண்டனர்.  

இந்த சம்பவம் குறித்து மணியும் அவரது மருமகனும் காவல்துறையில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து, துணை ஆய்வாளர் சுபாஷினி வழக்குப் பதிவு செய்து சாமியார்களை விசாரணை செய்து வருகிறார். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை இது போன்ற சாமியார்கள் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Source link