-நமது நிருபர் -சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு அக்கட்சியின் முன்னாள்

-நமது நிருபர் –

சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை பிரசாரத்தை துவங்கினார்.

தமிழக சட்டசபை தேர்தலில் பாஜவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னை மயிலாப்பூர் தொகுதி பாஜவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் அக்கட்சி சார்பில் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை போட்டியிட முயற்சி செய்து வருகிறார். அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இந்த தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று பிரசாரத்தை துவங்கினார். அப்போது அங்கு வந்த தமிழிசை, இபிஎஸ் உடன் சேர்ந்து ஓட்டு சேகரித்து வருகிறார். இதனையடுத்து, அந்த தொகுதியில் அவர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

Source link