தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பணம் செலுத்தியும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் வழங்கவில்லை. இதனால் பங்க் மூடப்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார். அத்துடன், சில சிலிண்டர் ஏஜென்சிகளும் மூடப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் கியாஸ் சிலிண்டர், பெட்ரேல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்பது வதந்தி. பீதியில் மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதை மக்கள் தவிர்க்கவும் என்று தெலுங்கானா அரசும், டீலர்களும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
