சென்னை: கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத 19 புதிய தொகுதிகளில், பாஜ இந்த தேர்தலில் போட்டியிடுகிறது.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியலை இபிஎஸ் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். அதில் பாஜவுக்கு மொத்தம் 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ல் பாஜ போட்டியிட்ட 20 தொகுதிகளில், திருநெல்வேலி, நாகர்கோவில், மொடக்குறிச்சி, கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றது.
இந்த நான்கு தொகுதிகளில், மொடக்குறிச்சி, நாகர்கோவில் ஆகிய 2 மட்டுமே இந்த முறை பாஜவுக்கு மீண்டும் தரப்பட்டுள்ளன.
கோவை தெற்கு, திருநெல்வேலி ஆகிய 2 சிட்டிங் எம்எல்ஏ தொகுதிகளை அதிமுகவே வைத்துக் கொண்டுள்ளது.
2021ல் போட்டியிட்ட 20 தொகுதிகளில் துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, திருநெல்வேலி, காரைக்குடி, தாராபுரம், மதுரை வடக்கு ஆகிய 12 தொகுதிகளை இம்முறை பாஜ பெறவில்லை.
அவற்றுக்கு பதிலாக, மயிலாப்பூர், அவினாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, கந்தர்வக்கோட்டை (தனி), புதுக்கோட்டை, திருப்பத்தூர், மதுரை தெற்கு, சாத்தூர், திருச்செந்தூர், வாசுதேவ நல்லூர்(தனி), ராதாபுரம், ஆவடி, தஞ்சாவூர், திருவாரூர், அறந்தாங்கி, மானாமதுரை(தனி), பத்மநாபபுரம், ராசிபுரம் (தனி) என 19 தொகுதிகளை புதிதாக பெற்றிருக்கிறது.
இந்த தொகுதிகள் அனைத்தும் கடந்த முறை அதிமுக போட்டியிட்ட தொகுதிகள்.
