ஓபன் ஏஐ நிறுவனம், தனது ‘சோரா’ (Sora) வீடியோ உருவாக்கச் செயலியைத் திடீரென மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்த செயலி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பயனர்கள் உள்ளீடு செய்யும் Prompt க்கு ஏற்றவாறு அப்படியே தத்ரூபமான வீடியோக்களாக உருவாக்கும் வசதியை கொண்டிருந்தது.
இந்நிலையில் நேற்று சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்ட ஓபன்ஏஐ, “சோரா செயலிக்கு விடைகொடுக்கிறோம்” என சுருக்கமாக அறிவித்தது.
வெறும் மூன்று மாதங்களுக்கு முன்புதான் டிஸ்னி நிறுவனம்ஓபன் ஏஐ உடன் 1 பில்லியன் டாலர் (சுமார் 8,300 கோடி ரூபாய்) மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்திருந்தது.
இதன் மூலம் டிஸ்னியின் 200 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற கதாபாத்திரங்களை சோரா மூலம் பயன்படுத்த திட்டமிடப்பட்டது.
அதாவது, அந்த கதாபாத்திரங்களை வைத்து AI வீடியோக்கள் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது.
