த்ரிஷ்யம் படங்களின் வெற்றியை தொடர்ந்து அதன் மூன்றாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. ஜீத்து ஜோசப் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருக்க, மீனா, அன்சிபா ஹசன், எஸ்தர் அனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆசீர்வாத் சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார்.
த்ரில்லர் மற்றும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்த முதல் இரண்டு பாகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் முதல் பாகம் திரையரங்கில் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. இப்போது மூன்றாம் பாகம் திரையரங்குகளில் வெளியாகிறது. முதலில் ஏப்ரல் 2ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்பு மே 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் மோகன்லால் பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் மேலும் ஆர்வத்துடன் பார்க்க காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் மூன்றாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்தை படக்குழு பெரிய திரையில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதனால் ஓடிடியில் பார்த்த இப்படத்தை பெரிய திரையில் காண ஆர்வமாக இருக்கின்றனர்.
Drishyam 2, returns to where it truly belongs.
In theatres from April 10th, 2026.#Drishyam2@aashirvadcine@antonypbvrpic.twitter.com/cBGsLEPC1D
— Mohanlal (@Mohanlal) March 25, 2026
