டோக்கியோ: கிழக்காசிய நாடான ஜப்பானுக்கும், நம் அண்டை நாடான சீனாவுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது. இதனால், இரு தரப்பு உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள சீன துாதரக வளாக சுற்றுச்சுவரை தாண்டிச் சென்று ஒருவர் உள்ளே நுழைய முயன்றார். இவர் ஜப்பான் ராணுவத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஜப்பானுக்கு சீனா கடும் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், 23 வயதான அந்த ராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. முறையான விசாரணை நடப்பதாகவும், இதில் ராணுவம் முழு ஒத்துழைப்பை அளிக்கிறது என்றும் ஜப்பான் வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
முதல் கட்ட விசாரணையில், ஜப்பான் குறித்த சீனாவின் கண்ணோட்டத்தைக் கண்டிக்கும் வகையில், அந்த நாட்டின் துாதரை சந்திக்கும் நோக்கத்தில் அந்த வீரர் சென்றதாக தெரியவந்துள்ளது.
