50ஐ 500 ஆக்கி விட்ராதிங்கண்ணா; மீண்டும் விஜயை சீண்டிய ஜூலி

தஞ்சாவூரில் கடந்த 4ஆம் தேதி நடந்த தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், விஜய்யை பார்ப்பதற்காக அவர் சென்ற வாகனத்தை முன்பும், பின்பும் ஏராளமான இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து சென்றனர். அதில் விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் ஷாருண் ஆகியோர் போலீஸ் வாகனத்தில் மீது மோதி இருவரும் பலத்த காயமடைந்தனர். பின்பு இருவரும் தஞ்சை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முதலில் ஷாருண் உயிரிழந்தார். பின்பு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விக்னேஷ் நேற்று உயிரிழந்தார். இது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவம் குறித்து தற்போது ஜல்லிகட்டு போராட்டத்தில் கவனம் ஈர்த்தவரும் பிக்பாஸ் மூலம் பிரபல்மாகி தற்போது நடிகையாக இருப்பவருமான ஜூலி பேசியுள்ளார். அவர் வெளியிட்ட வீடியோவில், “50… 50ஆகவே இருக்கட்டுண்ணே, 500 ஆக்கிடாதீங்கன்னு சொன்னதுக்கு அந்த வல்கர் வாரியர்ஸ் கமெண்ட் செக்‌ஷன்ல வந்து பொங்கு பொங்குன்னு பொங்குனாங்க. இன்னைக்கு ஒரு புள்ள செத்துபோச்சு. அதை வச்சு அரசியல் பேசக்கூடாதுன்னு பார்த்தாலும் மனசு கேட்கமாட்டேங்குது. ஆசைய அண்ணே அண்ணேன்னு உன்ன பார்க்கனும்னு வந்துதானே போலீஸ் ஜீப்ல மோதி அந்த புள்ள செத்துப்போச்சு. இது பெத்தவங்களுக்குத்தானே நஷ்டம்.

உங்களுக்கு எண்ணாண்ணே நீங்க ஜாலியா நிகழ்ச்சிக்கு போய்ட்டு வருவீங்க. ஏன்னா நம்ம வீட்டுலையா உயிர் போச்சு. நான் திரும்பவும் சொல்றேன் ஐம்பதை ஐநூறு ஆக்கிவிட்ராதீங்க. உடனே இதுக்கு பேசுனியா, அதுக்கு குரல் கொடுத்தியான்னு வந்துராதீங்க. எல்லாத்துக்கும் நாங்க பொறுப்பேத்துக்குறோம். 41 பேரு இறந்தப்ப செய்தியாளர்களை பார்த்து ஓடி ஒடியல. இதுல வேற பெண்களுக்கு பாதுகாப்பில்லன்னு பேசுறீங்க. உங்க வல்கர் வாரியர்ஸ்கிட்ட இருந்து தான் பாதுகப்பு இல்ல. வேணும்னா என் கமெண்ட் செக்‌ஷனபாருங்க தெரியும்” எனப் பொங்கியுள்ளார். 

இவர் சமீபத்தில் விஜய் குறித்து தொடர்ச்சியாக பேசி வருகிறார். அண்மையில் வேலூர் கட்சி நிர்வாகிகள் சந்திப்பில், காளை மாட்டை வைத்து விஜய் சொன்ன ‘குட்டி ஸ்டோரி’-யை வைத்து கடுமையாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதன் பிறகு கிட்னி விற்பனை மோசடி தொடர்பாக தன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை தவெக நிர்வாகிகள் முன்வைப்பதாக 8 பேர் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். இப்போதும் மீண்டும் விஜயை சீண்டியுள்ளார். 

Source link