தேர்தல் ரேஸில் அதிமுக; முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. . இந்த தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பா.ஜ.கவுக்கு 27 தொகுதிகள், அமமுகவுக்கு 11 தொகுதிகள், பா.ம.கவுக்கு 18 தொகுதிகள், த.மா.கவுக்கு 5 தொகுதிகள், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 2 தொகுதிகள், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு 1 தொகுதி, புரட்சி பாரதம் கட்சிக்கு 1 தொகுதி என 65 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 169 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதன்படி, எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி, வேப்பனஹள்ளி தொகுதியில் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் தொகுதியில் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன், தொண்டாமுத்தூர் தொகுதியில் எஸ்.பி.வேலுமணி, குமாரபாளையம் தங்கமணி, ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமார், மைலம் தொகுதியில் சி.வி.சண்முகம், மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூ, பாலக்கோடு தொகுதியில் கே.பி.அன்பழகன், நன்னிலம் தொகுதியில் காமராஜ், வேதாரண்யம் தொகுதியில் ஓ.எஸ்.மணி ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர், கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ, திருமங்கலம் தொகுதியில் ஆர்.பி.உதயகுமார், சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜி, மதுரவயல் தொகுதியில் பா.பென்ஜமின், கலசபாக்கம் தொகுதியில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திருப்பரங்குன்றம் தொகுதியில் ராஜன் செல்லப்பா, பவானி தொகுதியில் கே.சி.கருப்பணன், ஜோலார்பேட்டை தொகுதியில் கே.சி.வீரமணி, கரூர் தொகுதியில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அரியலூர் தொகுதியில் தாமரை எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source link