”பொறுப்பில்லாமல் பேசி தப்பிக்க நினைக்காதீர்” – ஆதவ் அர்ஜுனா மீது மாணிக்கம் தாகூர் காட்டம்

சென்னை: ‘பொறுப்பில்லாமல் பேசிவிட்டு தப்பித்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம்’ என்று தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பொதுச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்களும் தவெக வாசல் முன்பு நிற்கிறார்கள். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள்” என்று பேசியிருந்தார்.

இதற்கு எதிர்வினையாற்றி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இன்று வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ஆதவ் அர்ஜுனின் கருத்துகள் வெறும் பொறுப்பற்றவை அல்ல. அவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை. இந்திய தேசிய காங்கிரஸ் என்பது சாதாரண கருத்து தெரிவிக்கும் மேடை அல்ல; இது தியாகம், ஒழுக்கம் மற்றும் கூட்டு முடிவெடுப்பின் அடிப்படையில் உருவான வரலாற்றுப் பெரும் இயக்கம். நாங்கள் ஒரு குடும்பமாக செயல்படுகிறோம். ஒன்றாக முடிவு செய்கிறோம், ஒன்றாக செயல்படுத்துகிறோம்.

Source link