இதனை தொடர்ந்து, மனிதநேய ஜனநாயக கட்சி, எஸ்டிபிஐ மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சிகள் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, திமுக கூட்டணியில் காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஐ 5, சிபிஎம் 5, மதிமுக 4, ஐயுஎம்எல் 2, கொமதேக 2, மமக 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துவிட்டது.
